About Author

 

JB

Once you start working on something, don’t be afraid of failure and don’t abandon it. People who work sincerely are the happiest.

The one excellent thing that can be learned from a lion is that whatever a man intends doing should be done by him with a whole-hearted and strenuous effort.

Before you start some work, always ask yourself three questions – Why am I doing it, What the results might be and Will I be successful. Only when you think deeply and find satisfactory answers to these questions, go ahead.

பிடித்தது: இனிமையான பாடல்கள் கேட்பது (பாட்டு இல்லைன்னா நான் இல்லை) , சமைப்பது…

பொழுது போக்கு : ஓவியம் வரைவது

தொழில்: தகவல் தொழில்நுட்பத் துறையில் [ Information Technology ] டேட்டபேஸ் அட்மினிஸ்டர் [ Sr. Database Administrator]…

Director of JLine Exotic Arts LLC & www.jlineartsandsilks.com

ONGOING NOVELS
PUBLISHED NOVELS
COMPLETED NOVELS
FUTURE NOVELS
PAINTINGS

Testimonials & Reviews

காதலா? கர்வமா?

Mohi Karthi

காதலா? கர்வமா?
JB

ஹர்ஷா….என்ன சொல்ல….கோபம் பிடிவாதம் கர்வம் என்று அனைத்து குணநலன்களும் பெற்ற ஒருவன்.???

எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன், முதல் பார்வையிலேயே கனிகாவை காதலித்து, அவள் தனக்குமட்டும் தான் சொந்தம் என்ற பிடிவாதகுணத்தால் அவன் செய்யும் ஒவ்வொரு செயலும், பின்னாலில் அவன் காதலுக்கே எதிரியாகிவிடுகிறது.

பின்பு உண்மை உணர்ந்து இழந்த காதலை அவன் தக்க வைத்துக் கொள்ள போராடும் போராட்டங்கள் எல்லாம் பார்க்கும்போது…அந்த கர்வம் பிடித்த ஹர்ஷாவா என்று நினைக்க தோன்றுகிறது..

கனிகா….???
கிராமத்தில் வளர்ந்த பெண்…தன் தாயை இழந்து, தாய்மாமனின் தயவில் கல்லூரி படிப்பில் சேர, அங்கு ஹர்ஷா முதல் பார்வையிலேயே அவளின் மனதை கொள்ளை கொள்கிறான். அதன் பின் அவனது அதிரடியான காதலை பார்த்து, பயந்த சுபாவம் உள்ள கனிகா, அவனிடம் அல்லாடுவது பாவமாக இருந்தது. இருந்தும் அவனை விட பலமடங்கு காதலை சுமந்து இருந்தவளுக்கு, ஹர்ஷா சந்தேகம் கொண்டு பேசியது…அவளின் மனதை ரணப்படுத்துகிறது…

தன் தவறை உணர்ந்து வந்த ஹர்ஷாவை ஏற்றுக் கொண்டாளா கனிகா?
ஹர்ஷாக்கே தண்ணிக் காட்டியது சூப்பர்.

அகில்…..???
பாவம் இவன்தான் நடுவில் அல்லாடுகிறான்..
கனிகாவை ஒருதலையாக காதலித்ததுதான் இவன் தவறு..ஆனால் ஹர்ஷா என்று கனிகாவை விரும்புகிறான் என்று தெரிந்ததோ..அதன் பிறகுகனிகாவிற்கு நல்ல ஆசானாகவும், நண்பனாகவும் கடைசிவரை விளங்குகிறான்…

இன்னும் கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அவர்ரவர் ரோலுக்கு ஏற்றவாறு அழகாக வந்து செல்கின்றனர்…

முக்கியமானது சொல்ல மறந்துட்டேன்…????????
ஹி..ஹி….ஹர்ஷாவோட ரொமான்ஸ் சும்மா அல்லுது, ஐ என்ஜாய் இட்,??????

ஹர்ஷாவை பார்த்தாச்சு…
அடுத்து அர்ஜூன் உன்னையும் கூடிய விரைவில் சந்திக்க வருகிறேன்….
அதுவரை நன்றி கூறி விடைபெறுவது
உங்கள்
மோகனா கார்த்திக்.???

Top of Form

காதலா?கர்வமா?

Sri Kala

15 March ·

மலரினும் மெல்லியவள் By JB TamilNovels

முதல் கதையே முத்தான கதை… காதலா? கர்வமா? தலைப்பிலேயே இவங்க கதையை சொல்லிட்டாங்க… கடைசிவரை காதலுடன் நாயகனின் கர்வமும் சேர்ந்து வாழ்ந்தது அவ்வளவு அழகு… இவங்க கதைக்கு நான் மிகப் பெரிய ரசிகை… இதோ இரண்டாவது கதையையும் இவங்களோட தனி முத்திரையோடு அழகாக கொடுத்துக்கிட்டு இருக்காங்க… உணர்வுகளை கையாள்வதில் என்னை பிரமிக்க வைத்தவர்களுள் இவரும் ஒருவர்… வாழ்த்துக்கள் ஜேபி ???

மலரினும் மெல்லியவள்!

என்ன ஒரு கதை !

அர்ஜுன் 

பொதுவா அர்ஜுன்ற நேம் எனக்கு அவ்வளவு இஷ்டம்?

ஹீரோவுக்கெல்லாம் ஹீரோ என்ன ஒரு கெத்து கண்டிப்பு சான்ஸே இல்லை காதல் மன்னன் ???? என் மனச திருடிய காதல் மன்னன் .. அவன போலவே அவன் காதலும் அத்தனை அழுத்தம்…

திவ்யா 

டைடில்க்கு ஏத்த கேரக்டர் மலரிலும் மென்மையானவள்…. இவகூட சேந்து நாங்களும் பயந்துட்டேதான் இருந்தோம் அவ்ளோ பயந்த சுபாவம் ?… அதிரடி அவனை சமாளிக்கவே அமைதியா அவளை படச்சது செம காம்பினேஷன்

இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்சது ஸ்ரீ இப்படி ஒரு அம்மா மாமியார் தேவை சோ கியூட்??????

போன கதைல சிங்கத்தத்த நினைவூட்டுன உங்க ஹீரோ.. இந்த கதைல புலி பாயும் புலிய நினைவூட்டுறான் ???????

வாழ்த்துக்கள் ஜெனிமா … இவ்ளோ சூப்பர் ஹிட் கதை குடுத்ததுக்கு நன்றி ????????

மலரினும் மெல்லியவள்!

Priyanka Muthukumar Novels is feeling loved with JB TamilNovels.

ஹாய் ஜெலின் சிஸ்டர்,
உங்களின் இரண்டாவது கதையான மலரினும் மெல்லியவள் கதையை ஆரம்பத்தில் படிக்காத நான்…உங்களின் கதைக்கு வந்த விமர்சனத்தை வைத்து தான்…படிக்க ஆரம்பித்தேன்…ஆனால் கதையைப் படித்தவுடன்…என்னை மறந்து அந்த கதையில் மூழ்கி திளைத்துவிட்டேன்…!!அந்த அளவிற்கு என்னை திவ்யாவும் அர்ஜூனும் ஈர்த்திருந்தார்கள்.

நான் படித்த கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை இந்த மலரினும் மெல்லியவள் என்று கூறுவதில் எனக்கு மகிழ்ச்சியே…!!

மலரினும் மெல்லியவள் என்ற கதையின் தலைப்பிற்கு ஏற்ற மாதிரி திவ்யா மிகவும் மென்மையானவள்…!!

அந்த மகாபாரதத்தில் வந்த அர்ஜூன்…தனது எதிரிகளை வீழ்த்துவதற்கு…கூரிய அம்பைப் பயன்படுத்தினான் என்றால்…இந்த அர்ஜூன்…தனது எதிரிகளை வீழ்த்துவதற்கு…தனது கூரிய புத்தியைப் பயன்படுத்தினான்.

அர்ஜூன் சில நேரங்களில் எதிரிகளை தனது கூரிய பார்வையாலே…நடு நடுங்க வைப்பதும்…பிறகு சதுரங்க விளையாட்டை எதிரிகளை வீழ்த்தப் பயன்படுத்தும் யுக்தியாகவும் அர்ஜூன் வரும் காட்சிகளில் நமக்கே அவன் மீது ஒரு பயம் எழும்புகிறது.

அப்படிப்பட்ட அர்ஜூன் தனது தாயின் வார்த்தைக்காக யாரென்றே தெரியாத ஒரு பொண்ணை திருமணம் செய்து…அவளோடு வாழப் பிடிக்காமல்…திருமணம் ஆன அன்றே…அவளிடம் விவாகரத்து கேட்பதும்…அதற்காக அவளை கொடுமைப்படுத்துவதும்…அதன்பிறகு அவளின் மென்மையான மனதைப் புரிந்துக் கொண்டு…அவளிடம் காதல் கொள்வதும்…அவள் இவனை சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் பிரிந்து செல்வதும்…அவளைத் தேடிப்பிடித்து அவளிடம் தன் காதலைப் புரிய வைப்பதும்…யாருக்குமே அடங்காத அந்த ஆண்மகன்…19 வயது பாவையவளிடம் அடங்குவது…இப்படி எல்லாமே அருமை…!!???

அடுத்து திவ்யா மிகவும் மென்மையான மனம் கொண்டவள்… அவளும் தனது பெற்றோருக்காக யாரேன்றே அறியாத ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்வதும்…திருமணத்திற்கு பிறகு அவனின் தோற்றத்தைப் பார்த்து…காதல் கொள்வதும்…அதேசமயம் அவனின் பொருளாதார நிலைமையையும்…அவனின் கடினத்தையும் பார்த்து அஞ்சி நடுங்குவதும்…அவன் பார்க்கும் காதல் பார்வையின் அர்த்தம் புரியாத அந்த பாவை…அவனின் காதலைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்வதும்…அதன்பிறகு இருவரும் சேர்வதும் ஒவ்வொரு காதல் காட்சிகளும் மிக அருமை சிஸ்டர்…!!???

அதுவும் திவ்யா மற்றும் அர்ஜூனின் காதல் காட்சிகள் அருமை சிஸ்டர் …..????

அதேபோல் இருவரின் குடும்ப உறுப்பினர்களும்…அவர்களுக்கான இடத்தையும்…எங்களின் மனதில் பிடித்திருக்கின்றனர்.

கதிர் இந்த கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லியே ஆகணும்…ஒவ்வொரு முதலாளிக்கும் இப்படி ஒரு நல்ல விசுவாசிக் கிடைத்தால்…யாராலும் அவர்களின் முதலாளியை நெருங்க முடியாது… அர்ஜூன் ஒரு காரியத்தைச் செய்யச் சொல்வதற்கு முன்…கதிர் அதை முடித்திருப்பான் இப்படி எல்லா இடத்திலும் அர்ஜூனிற்கு உறுதுணையாக இருந்து தனது பாத்திரத்தை நிலைநிறுத்தியிருக்கிறான்…!!???

அதற்கு நடு நடுவே வரும் மஹா வினோத் காதல் காட்சிகளும் மிக அருமை…அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும்…அதை மறைத்து வைத்து தங்களுக்கு போராடிக் கடைசியாக இருவரும் சேர்க்கின்றனர்…!!

கோகுல் இந்த கதையின் வில்லன்…மஹாவின் மேல் ஆசைப்பட்டு…அவளை அடைவதற்காக…அவளையும் திவ்யாவையும் கடத்துகிறான்…அரசியல்வாதிக்களுக்கே சிம்ம சொர்ப்பனமாக இருந்த அர்ஜூன்…சாதாரண கல்லூரி மாணவனால் படாத அவஸ்தைப் படுகிறான்…அதனால் திவ்யாவின் பிரசவ நேரத்தில் அவளுக்கு மிகப்பெரிய கேட்டை விளைவிக்கிறான்…அதன்மூலம் அர்ஜூனே தனது மனைவி திவ்யாவிற்கு பிரசவம் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்…அவன் பிரசவம் பார்க்கும் காட்சிகள்…அனைத்தும் என்னை மிகவும் நெழித்தியது…???அதை சத்ரூபமாக கொண்டு வந்தற்கு முழுகாரணம்…உங்களின் எழுத்துக்கள் தான் ஜெலின் சிஸ்டர்…!!அதற்கு வாழ்த்துக்கள் சிஸ்டர்…!!????????

கடைசியாக கோகுலிற்கு அர்ஜூன் அவனின் தவறுக்கான தண்டனை வழங்குவது…அதன்பிறகு திவ்யா மற்றும் அர்ஜூனின் புதல்வன் அபிமன்யு கிருஷ்ணா…அவனின் பெயர் காரணத்தை எடுத்துரைக்கும் அர்ஜூன்…இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே செல்லலாம்…ஆனால் அத்தனையும் இங்கே கூற முடியாது என்பதால் சிலது மட்டும் சொல்லியிருக்கிறேன்…!!

இப்படி எல்லாவற்றையும் எங்களின் மனதில் பதிய வைத்த உங்களின் எழுத்து நடை அருமை சிஸ்டர்…மொத்தத்தில் எல்லாமே அருமை சிஸ்டர் …அபிமன்யு கிருஷ்ணாவைப் பத்தி அறிய நாங்க காத்திருக்கிறோம்….அதனால் ரொம்ப நாள் காக்க வைக்காமல் சீக்கிரம் வந்திடுங்க…!!

நீங்கள் மேலும்மேலும் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜே.பி சிஸ்டர்…!!????

CONTACT

LOCATION

CALL US

India: +91 90809-91804

Sign up for newsletter today.

Send Message

PINTEREST

TWITTER

FACEBOOK

©2018 JB Tamilnovels