மலரினும் மெல்லியவள்!

“இல்ல மாப்பிள்ளை… அபிமன்யு பேரு ரொம்ப நல்லா இருக்கு… இல்லைன்னு சொல்லலை… ஆனால் அபிமன்யு…” என்று முடிக்கவில்லை… திவ்யா சட்டென்று… “அப்பா…” என்க… தன் மனையாளைப் திரும்பிப் பார்த்தவன்… “திவி…” என்ற ஒற்றை வார்த்தையில் அவளை அடக்கியவன் பேசுங்கள் என்பதுப் போல் தன் மாமனாரிடம் தலை அசைக்க… ஏதோ தைரியத்தில் பேச்சை துவங்கிவிட்டோம்… பேசி முடித்துவிடுவோம் என்பது போல்… “அதான் மாப்பிள்ளை… வேற பேரு வைக்கலாமேன்னு தான்…” என்று ஒரு வழியாக, இழுத்து, தயங்கி, தடுமாறி முடித்தார்……